×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வளர்ப்பு மகளை 6 மாதமாக மிரட்டி சீரழித்த தந்தை; கைம்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து நடந்த பயங்கரம்.!

வளர்ப்பு மகளை 6 மாதமாக மிரட்டி சீரழித்த தந்தை; கைம்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து நடந்த பயங்கரம்.!

Advertisement

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள முஜாபர்நகர் மாவட்டம், ஆழ்வார்பூர் கிராமம், பாவுர கலா பகுதியில் வசித்து வருபவர் சந்தர் பால். இவரின் மகன் ஜிதேந்திர வால்மீகி. இவர், அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். 

பெண்ணின் இரண்டாவது திருமணம்

அந்த பெண்ணுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், முதல் கணவர் இறந்த காரணத்தால் பெண்மணி தனது இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜிதேந்திராவை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். 

இதையும் படிங்க: திருமண ஊர்வலத்தில் கரிக்கட்டையான மணமகன்; ஆவலுடன் காத்திருந்த மணப்பெண்ணுக்கு தீயாய் சென்ற துக்க செய்தி.!

சிறுமியை மிரட்டி பலாத்காரம்

இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த மகளின் மீது காமப்பார்வையை திருப்பிய கொடூரன், மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் வளர்ப்பு மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியே கூறினால் கொலை செய்திடுவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

6 மாதமாக நேர்ந்த துயரம்: 

இதனால்  பயந்துபோன சிறுமியும் தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் கூறாமல் இருக்க, இதனை தனக்கு சாதகமாக்கிய கொடூரன், கடந்த 6 மாதமாக அத்துமீறலை தொடர்ந்து இருக்கிறான். ஒருகட்டத்தில் சிறுமி தனக்கு நேர்ந்த துயரம் குறித்து தாயிடம் கூறியிருக்கிறார். 

போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது

இதனையடுத்து, சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் வளர்ப்பு தந்தை ஜிதேந்திராவை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க: மேகியுடன் அரிசி சாதம் சாப்பிட்டதால் சோகம்; உணவு விஷமாக மாறி சிறுவன் பலி..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar pradesh #Rape #India #Step Father #Pocso Act
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story