Watch: அந்த மனசு தான் சார் கடவுள்.. ஷமியின் அம்மா காலில் விழுந்து ஆசி வாங்கிய விராட்... புகழ்ச்சியின் உச்சத்தில் கிங் கோலி.!
Watch: அந்த மனசு தான் சார் கடவுள்.. ஷமியின் அம்மா காலில் விழுந்து ஆசி வாங்கிய விராட்... புகழ்ச்சியின் உச்சத்தில் கிங் கோலி.!

விராட் கோலியின் நற்பண்பு குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
துபாயில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப்போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி வெற்றி அடைந்தது. நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 251 ரன்கள் எடுத்தது.
252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியில், ரோஹித் சர்மா அரைசதம் கடந்து அசத்தல் பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: வேட்டி-சட்டையுடன் திருமண விழாவில் கலந்துகொண்ட தல தோனி; வீடியோ வைரல்.!
இதனால் இந்திய கிரிக்கெட் அணி இறுதியில் 4 விக்கெட் வித்தியாசத்தில், 254 ரன்கள் அடித்து வெற்றி அடைந்தது. இந்த வெற்றி ஒட்டுமொத்த இந்தியர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வெற்றிபெற்ற அணியினர் தங்களின் குடும்பத்துடன் இருந்தனர். அப்போது, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி, தனது அம்மாவை விராட் கோலியிடம் அறிமுகம் செய்தார்.
அம்மா என்றதும் அன்னையின் காலில் விழுந்து ஆசி வாங்கி பேசிய விராட், அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ள நிலையில், பலரும் விராட் கோலியின் செயல்பாடை பாராட்டி மகிழ்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் ட்ராபி 2025 பைனலில் இந்தியா.. மிகப்பெரிய அவமானத்தை எதிர்கொண்ட பாகிஸ்தான்.!