அட பாவமே... மனைவி, குழந்தைகள் மீது கொலை முயற்சி.!! மது பிரியர் வெறி செயல்.!!
அட பாவமே... மனைவி, குழந்தைகள் மீது கொலை முயற்சி.!! மது பிரியர் வெறி செயல்.!!
ஈரோடு அருகே கணவன் மற்றும் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் மனைவி மற்றும் குழந்தைகளை உயிருடன் எரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட கணவனிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவனின் சந்தேக புத்தி
மதுரையைச் சேர்ந்த திருமலை செல்வனுக்கும் ஈரோட்டை சேர்ந்த சுகன்யாவிற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 7 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான கணவன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் தகராறு செய்து வந்திருக்கிறார்.
தாய் வீட்டிற்கு சென்ற சுகன்யா
கணவனின் சந்தேக புத்தி காரணமாக அடிக்கடி குடித்து விட்டு வந்து தகராறு செய்ததால் கோபமடைந்த சுகன்யா தனது குழந்தைகளை கூட்டிக்கொண்டு ஈரோட்டில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று இருக்கிறார். மேலும் அங்குள்ள சாயப்பட்டறையில் வேலை செய்து தனது குழந்தைகளை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவியை பார்ப்பதற்காக ஈரோட்டிற்கு சென்றிருக்கிறார் திருமலை செல்வன்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த அத்தை மகளுக்கு கத்தி குத்து.!! முறை மாமன் தலைமறைவு.!!
தீ வைத்து கொலை செய்ய முயற்சி
இதனைத் தொடர்ந்து மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்திருக்கிறார். அதற்கு சுகன்யா எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருமலைச்செல்வன் தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை மனைவி மற்றும் குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்திருக்கிறார். இந்தக் கொடூர சம்பவத்தில் அவர்களது 4 வயது மகன் படுகாயம் அடைந்துள்ளான். இதனைத் தொடர்ந்து சிறுவனை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள திருமலை செல்வனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணம் செய்ய வற்புறுத்தியாதால் விபரீதம்... இளம் பெண் தற்கொலை.!! காதலன் கைது.!!