கூடா நட்பு கேடில் முடிந்தது.. அண்ணா பல்கலை., விவகாரத்தில் கைதான ஞானசேகரனின் திருட்டு கூட்டாளி கைது.. பகீர் தகவல் உள்ளே.!
கூடா நட்பு கேடில் முடிந்தது.. அண்ணா பல்கலை., விவகாரத்தில் கைதான ஞானசேகரனின் திருட்டு கூட்டாளி கைது.. பகீர் தகவல் உள்ளே.!

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடந்த விசாரணையில், தனிமையில் காதலர்களுடன் சந்திக்கும் பெண்களை குறிவைத்து மிரட்டல் விடுத்து அத்துமீறியது மட்டுமல்லாமல், பல பெண்களுடன் தொடர்பு வைத்து உல்லாசமாக இருந்தது, திருட்டு போன்ற குற்றச்செயலில் ஈடுபட்டு சொத்துக்களை வாங்கி குவித்தும் அம்பலமானது. இந்த வழக்கில் தொடர்புடைய ஞானசேகரன், கடந்த டிசம்பர் 23 அன்று சிறையில் அடைக்கப்பட்டார்.
குற்றச்செயலில் ஈடுபட்டு கைதான ஞானசேகரன், ஒருகட்டத்தில் நான் திருந்தி பிரியாணி கடை வைத்து நடத்துகிறேன் என அதிகாரிகளிடம் வாக்குறுதி அளித்து, அவர்களின் கண்களில் மண்ணைத்தூவி இரவு நேரங்களில் பள்ளிக்கரணை பகுதியில் சிசிடிவி கேமிரா இல்லாத வீடுகளை குறிவைத்து நகை கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
இதையும் படிங்க: திருச்சி: 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்; இரட்டை சகோதரர்கள் போக்ஸோவில் கைது, எலும்பு முறிவு.!
திருட்டு நண்பர்கள்
ஞானசேகரனின் செல்போனை ஆய்வுசெய்தபோது, அவருக்கு பொள்ளச்சியைச் சேர்ந்த முரளிதரன் (வயது 31) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. இருவரும் அவ்வப்போது உரையாடி வந்ததால், முரளி கைது செய்யப்பட்டார். அதாவது, பிஎஸ்சி இயற்பியல் படித்து, எம்பிஏ படிப்பை பாதியில் விட்ட பட்டதாரி முரளி, சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற மோசடி வழக்கில், செம்மஞ்சேரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட முரளிக்கு, சிறையில் ஞானசேகரனின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. முரளி ஆன்லைன் டிரேடிங்கில் பணத்தை இழந்து கடனாளியாக, 2019ல் ஞானசேகரனுடன் சேர்ந்து ஆட்கடத்தல், 2022 ல் கொள்ளை என நட்பு தொடர்ந்துள்ளது.
திருட்டு வழக்கில் சிறைவாசம்
ஒருகட்டத்தில் இருவரும் சேர்ந்து ட்ரேடிங் செய்தும் பலன் இல்லை. பின் முரளி சொந்த ஊருக்கே சென்றுவிட்ட நிலையில், அவர் பெங்களூரில் பணியாற்றியபோது ஐடி நிறுவன பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கணவன் ஊர் ஊராய் ஊதாரியாக சுற்றுவதால், குடும்பத்தை கவனித்து வரும் பெண்மணி, காதலித்து கரம்பிடித்த பாவத்துக்கு கணவனின் கடனை அடைத்து வருகிறார். முரளியோ பேருந்தில் கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது சிறைவாசம் அனுபவிக்கிறார்.
இதையும் படிங்க: பேருந்து - டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி பயங்கரம்.. 5 பேர் பலி., பதறவைக்கும் காட்சிகள்.!