#Breaking: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: இணை ஆணையர் மகேஷ் குமார் பணியிடைநீக்கம்.!
#Breaking: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: இணை ஆணையர் மகேஷ் குமார் பணியிடைநீக்கம்.!

சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் சென்னை காவலில், வடக்கு மண்டல காவல் இணை ஆணையராக இருந்து வருகிறார்.
இவரின் மீது சமீபத்தில் உடன் பணியாற்றும் பெண் காவலர் ஒருவர் பாலியல் புகார் அளித்து இருந்தார்.
இதனையடுத்து ஐபிஸ் சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டி அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் பெண் கொடுத்த புகாரில் முகாந்திரம் இருப்பது உறுதியானது.
இதனையடுத்து, புகாரில் இருக்கும் உண்மைதன்மையை அறிந்த அதிகாரிகள், இணை ஆணையரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கடந்த சில நாட்களாகவே மகேஷ் குமார் சொந்த விடுப்பில் இருந்து வரும் நிலையில், அவர் பணியிடைநீக்கம் செய்யட்டுள்ளார்.
இதையும் படிங்க: காதல் ஜோடிக்கு இப்படியா மரணம் ஏற்படனும்? இரயில் மோதி நடந்த சோகம்.!
இதனால் விரைவில் அவர் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: #JustIN: கியாஸ் கசிவால் குடும்பமே பலி.. சென்னையில் கணவன், மனைவி, மருமகன் உடல் கருகி மரணம்.!