#JustIN: கியாஸ் கசிவால் குடும்பமே பலி.. சென்னையில் கணவன், மனைவி, மருமகன் உடல் கருகி மரணம்.!
#JustIN: கியாஸ் கசிவால் குடும்பமே பலி.. சென்னையில் கணவன், மனைவி, மருமகன் உடல் கருகி மரணம்.!

கேஸ் இணைப்பை மாற்றும்போது கவனமாக செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.
சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம், வைகுண்டபுரம் பகுதியில் வசித்து வருபவர் வீரகுமார். இவரின் மனைவி லட்சுமி. வீரகுமார் கூலித் தொழிலாளி ஆவார். இவரின் வீட்டில் தம்பதி, தம்பதியின் மகள், மருமகன் என கூட்டுக்குடும்பமாக இருந்து வந்துள்ளனர்.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில், வீட்டில் இருந்த கியாஸ் காலியாகியது. இதனால் புதிய சிலிண்டரை மாற்றும் முயற்சியில் லட்சுமி ஈடுபட்டு இருந்தார்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனம் வாங்கிக்கொடுக்காததால் ஆத்திரம்; 19 வயது இளைஞர் தீக்குளித்து தற்கொலை.. சென்னையில் சோகம்.!
மூவர் பலி
அப்போது, கியாஸ் கசிவு ஏற்பட்டு, பூஜை அறையில் விளக்கு எரிந்து, அரை முழுவதும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் வீரக்குமார், லட்சுமி தீக்காயம் அடைந்தனர். இவர்களை மீட்கச் சென்ற மருமகன் குணசேகரனும் தீக்காயம் அடைந்தார்.
மூவரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 70% தீக்காயதுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், இவர்கள் மூவரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை: ஆக்ஸலை முறுக்கிய சிறுமி தலை நசுங்கி பலி.. இருசக்கர வாகனத்தில் தாத்தாவுடன் வந்த பேத்திக்கு நேர்ந்த சோகம்.!