காதல் ஜோடிக்கு இப்படியா மரணம் ஏற்படனும்? இரயில் மோதி நடந்த சோகம்.!
காதல் ஜோடிக்கு இப்படியா மரணம் ஏற்படனும்? இரயில் மோதி நடந்த சோகம்.!

இளம் தம்பதி பெருங்களத்தூரில் இரயில் மோதி உயிரிழந்த சோகம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள பெருங்களத்தூரில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த விக்ரம் (21), ஆதி லட்சுமி (22) ஆகியோர் இரயில் மோதி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. இருவரும் அண்டவாளத்தில் பேசிக்கொண்டு நடந்து சென்றபோது சோகம் அரங்கேறி இருக்கிறது.
காட்டுமன்னார்கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் ஒன்றாக படித்த இவர்கள், கல்லூரி பருவத்தில் காதல் வயப்பட்டு, படிப்புக்கு பிற வேலை தேடி சென்னை வந்துள்ளனர். பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில், இருவரும் தனித்தனியே தங்கி இருந்துள்ளனர்.
இதையும் படிங்க: #JustIN: கியாஸ் கசிவால் குடும்பமே பலி.. சென்னையில் கணவன், மனைவி, மருமகன் உடல் கருகி மரணம்.!
இரயில் மோதி சோகம்
விக்ரம் தனியார் வடிவமைப்பு நிறுவனத்திலும், ஆதி தமிழ் மேட்ரிமோனி நிறுவனத்திலும் வேலை பார்த்து வந்துள்ளனர். இருவரும் புறநகர் மின்சார இரயிலில் பயணம் செய்து வேலைக்குச் சென்று, பின் மீண்டும் தண்டவாளம் வழியே தங்களின் விடுகிக்கு செல்வார்கள்.
அந்த வகையில், நேற்று இவர்கள் தண்டவாளத்தில் பயணம் செய்தபோது, செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி பயணம் செய்த மின்சார இரயில் மோதி உயிரிழந்தனர். இரயில் ஓட்டுநர் சத்தம் எழுப்பியும் பலனில்லை. இறுதியில் இரயில் மோதியே நிறுத்தப்பட்டது. இதில் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக தாம்பரம் இரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனம் வாங்கிக்கொடுக்காததால் ஆத்திரம்; 19 வயது இளைஞர் தீக்குளித்து தற்கொலை.. சென்னையில் சோகம்.!