தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாள் இன்று.. பாஜக அண்ணாமலை, தவெக விஜய் வாழ்த்து.. விபரம் உள்ளே.!
தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாள் இன்று.. பாஜக அண்ணாமலை, தவெக விஜய் வாழ்த்து.. விபரம் உள்ளே.!

திமுக தலைவர் & தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், இன்று தனது 72 வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். தனது இளமை காலத்தில் இருந்து, தற்போது வரை தமிழ்நாடு மக்களுக்காக கட்சியிலும், மாநில அளவிலும் பல்வேறு பொறுப்புகள் வகித்து, தீவிர அரசியலில் மக்களின் அடையாளத்தை பெற்று இன்று முதல்வராக ஆகியுள்ளார். அவரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
அண்ணாமலை வாழ்த்து
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது வலைப்பக்கத்தில், "தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழ்நாடு பாஜக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு முக ஸ்டாலின் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என தெரிவிக்கப்ட்டுள்ளது.
இதையும் படிங்க: உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யதீங்கா - 'ஒன்றிணைவோம் வா' தமிழ்நாடு பாஜகவினருக்கு முதல்வர் வேண்டுகோள்.!
தவெக விஜய் வாழ்த்து
தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது வலைப்பக்கத்தில், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "கலெக்டர், எஸ்.பி எல்லாம் நான் சொல்றதைத்தான் கேட்கணும்" - திமுக மா.பொ ஆடியோ லீக்.!