நாய் கடித்து உயிரிழந்த மாடு, ஆடு, கோழிகளுக்கு இழப்பீடு.. சட்டப்பேரவையில் அமைச்சர்கள் அறிவிப்பு.!
நாய் கடித்து உயிரிழந்த மாடு, ஆடு, கோழிகளுக்கு இழப்பீடு.. சட்டப்பேரவையில் அமைச்சர்கள் அறிவிப்பு.!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டதொடரில், இன்று கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அதிமுக பெரிய கருப்பன், பாஜக வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர், கால்நடை இழப்பீடு, நாய்கள் கருத்தடைக்கு மாநகராட்சிக்கு அதிக நிதி விஷயம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர்.
நாய் கடித்து உயிரிந்தால் இழப்பீடு
இந்த கேள்விக்கு அரசு தரப்பில் பதில் அளிக்கையில், "நாய்கள் கடித்து உயிரிழக்கும் மாடுகளுக்கு ரூ.37500 , ஆடுகளுக்கு ரூ.4000 , கோழிகளுக்கு ரூ.100 இழப்பீடு வழங்கப்படும். தெருநாய் கடித்து உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ள 1149 பிராணிகளுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்பட்டு. பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும், முதல்வர் பொதுநிவாரண நிதியில் இருந்தும் இத்தொகை விடுவிக்கப்படும்.
இதையும் படிங்க: தமிழ்நாடு ரேஷன் கடை பொருட்கள் வீடு வீடாக விநியோகம் எப்போது? - அமைச்சர் சக்கரபாணி குட் நியூஸ்.!
அமைச்சர்கள் அறிவிப்பு
நாய்கள் கருத்தடை விஷயங்களை பொறுத்தவரையில், நாய்களின் உயிரிழப்புக்கு மருத்துவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என நிலை இருப்பதால், அந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும் என அமைச்சர்கள் ஐ.பெரியசாமி , கே.என் நேரு ஆகியோர் கூட்டாக தங்களின் பதிலை தெரிவித்து இருந்தனர். இதற்காக அரசு ரூ.42 இலட்சம் அளவில் தொகையை செலவிடுகிறது.
இதையும் படிங்க: #Breaking: ஜாகிர் உசேனின் உடலை பெற உறவினர்கள் ஒப்புதல்; உதவி ஆணையர், ஆய்வாளர் விரைவில் சஸ்பெண்ட்.!