#JustIN: என்னது புயல் இன்னும் கரையவே கடக்கவில்லையா?.. தமிழ்நாடு வெதர்மேன் ஷாக் தகவல்..!
#JustIN: என்னது புயல் இன்னும் கரையவே கடக்கவில்லையா?.. தமிழ்நாடு வெதர்மேன் ஷாக் தகவல்..!
பெஞ்சல் புயல் கரையை இன்னும் கிடைக்கவில்லை என அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
வங்கக்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், பல்வேறு சூழ்நிலைகள் மற்றும் இடர்பாடுகளை எதிர்கொண்டு பெஞ்சல் புயலாக உருவெடுத்தது. இந்த புயல் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு மேல், மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கத் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இரவு முதல் தொடரும் மழை
அதனை உறுதி செய்யும் வகையில், பலத்த காற்று, மழை என சென்னை நகரமே தத்தளித்துப்போனது. இரவுக்குள் புயல் கரையை கடந்துவிடும் என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் விடிய-விடிய கனமழை தொடருகிறது.
இதையும் படிங்க: கரையை கடந்தும் வேலையை காட்டிய பெஞ்சல் புயல்.. அடித்து நொறுக்கும் மழை.!
கரையை கடந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒரு சில இடங்களில் மிதமான காற்றுடன் மழை, திடீரென பலத்த காற்றுடன் கனமழை என வானிலை மாறி-மாறி தொடருகிறது. இந்த மழை புயல் மழைமேகம் வாயிலாக கிடைக்கிறது. புயல் புதுச்சேரியில் கரையை கடந்து அப்படியே நகர்வற்று இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
கரையை கடக்கவில்லை - தனியார் வானிலை
இதனிடையே, தனியார் வானிலை ஆய்வு மைய நிபுணர் ஜான், பெஞ்சல் புயல் வங்கக்கடல் பகுதியில், புதுச்சேரிக்கு அருகிலேயே இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: "புயலா, மழையா என்னை ஒன்றும் செய்யாதடி" - டாஸ்மாக் கடைகளில் குவிந்த குடிமகன்கள் குஷியோ குஷி..!