தலைக்கவசம் அணியாததால் விபரீதம்.. நிலைதடுமாறி ஏற்பட்ட விபத்தில் இளைஞர் மரணம்.!
தலைக்கவசம் அணியாததால் விபரீதம்.. நிலைதடுமாறி ஏற்பட்ட விபத்தில் இளைஞர் மரணம்.!

சென்னையில் உள்ள அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 18). சம்பவத்தன்று சிறுவன் தனது தந்தையின் இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு பகுதியில் சென்றுகொண்டு இருந்தார்.
அப்போது, குறுகிய சாலையில் மாணவர் வேகமாக சென்ற நிலையில், எதிர்த்திசையில் வாகனம் வந்துள்ளது. இதனால் திடீர் பதற்றமான நவீன், பிரேக் அடித்துள்ளார்.
இதையும் படிங்க: 7 வயது சிறுமி இப்படியா மரணிக்கும்? கேட் சரிந்து விழுந்து சோகம்.. தந்தை கண்முன் மகள் பலி.!
நிலைதடுமாறி விபத்து
இதில் வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில், படுகாயமடைந்த நவீன் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நவீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: #Breaking: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: இணை ஆணையர் மகேஷ் குமார் பணியிடைநீக்கம்.!