அதிவேகத்தால் அப்பளமாக நொறுங்கிய கார்; மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 5 பேர் உடல் நசுங்கி துள்ளத்துடிக்க மரணம்.!
அதிவேகத்தால் அப்பளமாக நொறுங்கிய கார்; மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 5 பேர் உடல் நசுங்கி துள்ளத்துடிக்க மரணம்.!
மழை நேரம், அலட்சியம், நண்பர்களுடன் கொண்டாட்ட மனநிலை, அதிவேகம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஐவரின் உயிரை பறித்துள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில், நேற்று இரவு கார் - கேரளா மாநில அரசுப் பேருந்து நேருக்கு னர் மோதிக்கொண்டு பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 இளைஞர்கள் பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: மழை நேரத்தில் அதிவேகம்.. டூவீலர்-அரசுப்பேருந்து மோதல்: சாக்கு வியாபாரி பலியானதன் பதறவைக்கும் காட்சிகள்.!
கார்-பேருந்து மோதி விபத்து
நேற்று இரவு சுமார் 9 மணியளவில், ஆலப்புழா மாவட்டத்தில் குருவாயூரில் இருந்து காயம்குளம் பகுதி நோக்கி அம்மாநில அரசுப் பேருந்து பயணம் செய்தது. அப்போது, எதிர்திசையில் கார் ஒன்றில் 7 பேர் இளைஞர்கள் குழு வந்துள்ளது.
அதிவேகத்தால் சோகம்
இவர்கள் சாலையில் சென்ற வேறொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது, எதிர்திசையில் வந்த வாகனம் மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளனர். மாணவர்கள் பயணித்த கார் அதிவேகத்தில் பயணம் செய்ததே, விபத்திற்கு முதற்கட்ட காரணமாக அமைந்துள்ளது என நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
மீட்புப்பணி
விபத்து குறித்து தகவல் அறிந்த ஆலப்புழா காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து உயிரிழந்தோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், 2 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உயிரிழந்தவர்கள் விபரம்
விசாரணையில், இவர்கள் அனைவரும் வந்தனம் மருத்துவக்கல்லூரியில் முதல் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள் என்பது தெரியவந்தது. உயிரிழந்தவர்கள் முகம்மத், முஹாஸின், இப்ராஹிம், தேவானந்த், ஷ்ரீதீபி என தெரியவந்தது. இவர்களின் கார் அப்பளம்போல நொறுங்கி, ஐவரில் மூவர் நிகழ்விடத்திலேயே, பிற இருவர் மீட்கப்பட்ட அடுத்தடுத்த நிமிடங்களில் உயிரை விட்டனர்.
விபத்துக்கு பின் பதிவு செய்யப்பட்ட காணொளி
விபத்து நடந்தபோது பதிவான காட்சிகள்
இதையும் படிங்க: மகனை அழைத்துவர ஆவலுடன் சென்றபோது விபரீதம்; பாரதிதாசன் பல்கலை., பேராசிரியர் விபத்தில் பலி.!