ஊட்டி: டூவீலர்-லாரி நேருக்கு நேர் மோதி சோகம்; 18 வயது கல்லூரி மாணவர் பலி..!
ஊட்டி: டூவீலர்-லாரி நேருக்கு நேர் மோதி சோகம்; 18 வயது கல்லூரி மாணவர் பலி..!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், உதகமண்டலம் - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில், இன்று இருசக்கர வாகனம் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
உதகமண்டலம் அரசு கலைக்கல்லூரில் பயின்று வரும் மாணவர்கள் இருவர், தங்களின் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தனர், அப்போது, கூடலூரில் இருந்து எதிர்திசையில் லாரி ஒன்று வந்தது.
இதையும் படிங்க: மதுரை: தனியார் பேருந்தின் அதிவேகத்தால் நேர்ந்த சோகம்; மூதாட்டி பலி, 15 பேர் படுகாயம்..!
வாகனம் மோதி சோகம்
இந்த இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கவே, இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மாணவர்கள் தலைக்கவசம் வைத்திருந்தபோது, அதனை அவர்கள் சரிவர அணியவில்லை.
லாரி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், மாணவர் லிபுன் (18) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மற்றொரு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை: லிப்டில் ஊழியருக்கு காத்திருந்த எமன்; உடல் நசுங்கி இளைஞர் மரணம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!