குழந்தை பிறந்த 10 வது நாள்.. மருத்துவமனை கழிவறையில் வழுக்கி விழுந்த இளம்பெண் மரணம்.. குடும்பத்தினர் கண்ணீர்.!
குழந்தை பிறந்த 10 வது நாள்.. மருத்துவமனை கழிவறையில் வழுக்கி விழுந்த இளம்பெண் மரணம்.. குடும்பத்தினர் கண்ணீர்.!

கழிவறைக்கு சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்த சோகம் கோவில்பட்டியில் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மந்தித்தோப்பு கிராமத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார். இவரின் மனைவி எலிசபெத் ராணி (வயது 25).
தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு ம்புந் திருமணம் நடைபெற்று முடிந்தது. சமீபத்தில் கர்ப்பமாக இருந்த ராணி, பிரசவத்துக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: #Breaking: 17 வயது சிறுவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு.! காவல்துறை குவிப்பு.!
அங்கு கடந்த பிப்.27ம் தேதி, அறுவை சிகிச்சை முறையில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து குழந்தை மற்றும் தாய் மருத்துவரின் கண்காணிப்பில் இருந்து வந்தனர்.
பெண் பரிதாப பலி
இதனிடையே மருத்துவமணியில் இருந்த ராணி, இரவு நேரத்தில் கழிவறைக்கு சென்றபோது வழுக்கி விழுந்தார். சுயநினைவு இல்லாமல் இருந்த பெண்ணை மீட்ட குடும்பத்தினர், உடனடியாக மருத்துவர்களை அழைத்தனர்.
அங்கு மருத்துவர்கள் பெண்ணை சோதனை செய்தபோது, அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரவசத்துக்கு அவசர சிகிச்சை கிடைக்காமல் பெண் பலி? அண்ணாமலை குற்றச்சாட்டு.. திமுக அரசுக்கு கண்டனம்.!