வேலைக்கு விண்ணப்பித்த பெண்ணிடம் ஆபாச பேச்சு: தனியார் நிறுவன ஊழியர் உட்பட இருவர் கைது.!
வேலைக்கு விண்ணப்பித்த பெண்ணிடம் ஆபாச பேச்சு: தனியார் நிறுவன ஊழியர் உட்பட இருவர் கைது.!

தனியார் நிறுவன வேலைக்கு விண்ணப்பித்த கல்லூரி மாணவியின் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசிய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் இருக்கும் கிராமத்தில் 23 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். இவர் அரசு கலைக்கல்லூரியில் முதல் ஆண்டு முதுகலை படித்து வருகிறார்.
இருவர் கைது
திண்டிவனம் - சென்னை சாலையில் இருக்கும் நிருவனத்தில், பகுதி நேர வேலைக்காக தனது சுயவிபரத்தை அனுப்பி இருக்கிறார். அதில் இருந்த நம்பரை பார்த்து, அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் நபரான பாண்டியராஜன் (வயது 34), அவரின் நண்பர் சந்துரு (வயது 24) ஆகியோர் மாணவிக்கு தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.
இதையும் படிங்க: பாண்டிச்சேரி போலாம் வா.. வீடியோ காலில் பேராசிரியர் சேட்டை.. ட்விஸ்ட் வைத்த கல்லூரி மாணவி.!
மாணவியிடம் ஆபாசமாக பேசி இருவரும் தொல்லை கொடுத்த நிலையில், ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த மாணவி திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திண்டிவனம், கீழ்க்காரனை கிராமத்தில் வசித்து வந்த பாண்டியராஜன், சந்துரு ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஒரு நொடியில் நேர்ந்த துயரம்.. சாலையை கடந்த 2 வயது சிறுவன் கார் மோதி பலி., துக்கத்தில் கதறிய தந்தை.!