பாண்டிச்சேரி போலாம் வா.. வீடியோ காலில் பேராசிரியர் சேட்டை.. ட்விஸ்ட் வைத்த கல்லூரி மாணவி.!
பாண்டிச்சேரி போலாம் வா.. வீடியோ காலில் பேராசிரியர் சேட்டை.. ட்விஸ்ட் வைத்த கல்லூரி மாணவி.!

போனில் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரின் செயல் எல்லை மீறி சென்றதால், மாணவி ஆசிரியருக்கு பாடம் எடுத்த சம்பவம் திண்டிவனத்தில் நடந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் கலை & அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த கல்லூரியில் பொருளாதார பிரிவில் மாணவி ஒருவர் பயின்று வருகிறார். பொருளாதார பிரிவில் குமார் என்ற பேராசிரியரும் பணியாற்றி வந்துள்ளார்.
இதையும் படிங்க: ஒரு நொடியில் நேர்ந்த துயரம்.. சாலையை கடந்த 2 வயது சிறுவன் கார் மோதி பலி., துக்கத்தில் கதறிய தந்தை.!
முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவியின் செல்போன் நம்பரை பெற்றுக்கொண்ட குமார், கடந்த செப்டம்பர் மாதம் முதல் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மாணவி பேராசிரியரின் செயல்பாடுகளை தவிர்த்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பேராசிரியர் மாணவிக்கு தொடர்பு கொண்டுள்ளார்.
பேராசிரியரின் அதிர்ச்சி செயல்
வீடியோ காலில் பேசிய பேராசிரியர், பாலியல் ரீதியாக பேசிவிட்டு, பாண்டிச்சேரி போயிட்டு வரலாம் வா என அழைத்துள்ளார். இதனால் விரக்தியடைந்த மாணவி பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு, திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பேராசிரியருக்கு எதிரான குற்றச்சாட்டு உறுதியாகவே, குமாரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கட்சி நிர்வாகிகள் பதவிக்கு பணமா? நோ., நெவர் - புஸ்ஸி ஆனந்த் உச்சகட்ட எச்சரிக்கை.!