ஒரு நொடியில் நேர்ந்த துயரம்.. சாலையை கடந்த 2 வயது சிறுவன் கார் மோதி பலி., துக்கத்தில் கதறிய தந்தை.!
ஒரு நொடியில் நேர்ந்த துயரம்.. சாலையை கடந்த 2 வயது சிறுவன் கார் மோதி பலி., துக்கத்தில் கதறிய தந்தை.!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் வசித்து வரும் சிறுவன் தஸ்வந்த். சிறுவன் சம்பவத்தன்று தனது உறவினர் மணிகண்டன் என்பவருடன் பயணம் செய்தார்.
இவர்கள் இருவரும் திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தனர். அப்போது, சாலையை கடக்க முற்பட்டபோது, இருசக்கர வாகனம் மீது, அவ்வழியே வந்த கார் மோதியது.
சிறுவன் பலி
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில், சிறுவன் தஸ்வந்த் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவரின் உறவினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: கட்சி நிர்வாகிகள் பதவிக்கு பணமா? நோ., நெவர் - புஸ்ஸி ஆனந்த் உச்சகட்ட எச்சரிக்கை.!
இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மகனை இழந்த வருத்தத்தில் சிறுவனின் தந்தை தலையில் அடித்து, மருத்துவமனை வளாகத்தில் கதறியபடி அழுத காட்சிகள் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: தோசை சாப்பிட்ட லாரி ஓட்டுநர் வாயில் நுரைதள்ளி மரணம்; தாய், காதலியின் சதிவலை.. பகீர் தந்த வாக்குமூலம்.!