டூவீலர் - வேன் மோதி நேர்ந்த சோகம்; வாகன ஓட்டி, லிப்ட் கேட்டு பயணித்த திருநங்கை பலி.!
டூவீலர் - வேன் மோதி நேர்ந்த சோகம்; வாகன ஓட்டி, லிப்ட் கேட்டு பயணித்த திருநங்கை பலி.!

இருசக்கர வாகனம் - வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோனூர் கிராமத்தில் வசித்து வருபவர் முருகன் (வயது 48). இவர் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12 மணியளவில், விழுப்புரத்தில் பணியை முடித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டு இருந்தார்.
இதையும் படிங்க: வேலைக்கு விண்ணப்பித்த பெண்ணிடம் ஆபாச பேச்சு: தனியார் நிறுவன ஊழியர் உட்பட இருவர் கைது.!
விபத்தில் மரணம்
அப்போது, விழுப்புரம் - திருச்சி சாலையில், திருமண மண்டபத்தில், அய்யங்கோவில்பட்டு கிராமத்தில் வசித்து வரும் திருநங்கை லக்சனா (வயது 25) உதவி கேட்டுள்ளார்.
அவரையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றுக்கொண்ட நிலையில், இருவரும் விராட்டிக்குப்பம் சாலையில் சென்றுகொண்டு இருந்தனர். அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி பயணம் செய்த வேன், இருசக்கர வாகனத்தில் மோதியது.
இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இருவரும், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .
இதையும் படிங்க: பாண்டிச்சேரி போலாம் வா.. வீடியோ காலில் பேராசிரியர் சேட்டை.. ட்விஸ்ட் வைத்த கல்லூரி மாணவி.!