வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
சிவகங்கை சீமையின் ராணியாக முடிசூட்டி, ஆங்கிலேயரை எதிர்த்து போராடி வென்று தென்னாட்டு ஜான்சி ராணியாக, வீர மங்கையாக போற்றப்பட்டவர் வேலு நாச்சியார். சிறுவயதில் இருந்தே துணிச்சலுடன் வளர்ந்து வந்த அவர் கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள்வீச்சு, ஈட்டி எறிதல், குதிரை ஏற்றம், யானை ஏற்றம் என அனைத்தையும் கற்று தேர்ந்துள்ளார்.
மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், உருது, பிரெஞ்சு என பல மொழிகளையும் கற்றுள்ளார். ஆங்கிலேயரை எதிர்த்த முதல் தமிழ் பெண் என்ற பெருமைக்குரிய அவருக்கு ஜனவரி 3 நேற்று பிறந்தநாள். அந்நாளில் நடிகரும், தவெக கட்சித் தலைவருமான விஜய் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 'பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்' விநியோகத்தில் முறைகேடு.. கண்டுகொள்ளுமா அரசு.?!
அதில் அவர், ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, சென்னை, பனையூரில் உள்ள எமது கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழக மக்களே தயாரா.?! இன்று முதல்.. பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்.!