கையில் கோடரியுடன் கல்லூரிக்குள் நுழைந்த லோ பட்ஜெட் புஷ்பராஜ்.. இதெல்லாம் கல்விக்கு தேவையாங்க?



a-low-budget-pushparaj-from-vadakku-jagadambha-college

 

புஷ்பா மற்றும் புஷ்பா 2 படங்கள் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக்கொடுத்தது. புஷ்பா படத்தின் வெற்றியைவிட, புஷ்பா 2 படத்தின் வெற்றி மிகப்பெரிய வசூல், வரவேற்பை வாரிக்குவித்தது. 

குறிப்பாக வடமாநிலத்தில் புஷ்பா 2 திரைப்படம், ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. பலரும் புஷ்பா போல உடைந்து அணிந்து, நடையை மாற்றிக்கொண்டு தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்நிலையில், Low Budget புஷ்பராஜ் ஒருவர், கல்லூரிக்கு கோடரியுடன் சென்றது தெரியவந்தது. 

இதையும் படிங்க: ரூ.15000 ஆட்டைய போட்டாங்கப்பா.. அழுவாகா? சிரிக்காவா? - சீரியல் நடிகருக்கு விபூதி அடித்த மோசடி ஆசாமி.!

இன்றளவில் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங் நபர்களாக வலம்வருவரை பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக அழைக்கின்றனர். இவ்வாறான நிலை எந்த மாதிரியான தாக்கத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தப்போகிறது என்ற கேள்வி மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது.

இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் உள்ள ஜெகதாம்பா கல்லூரி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், புஷ்பராஜ் போல வேடமிட்ட லோ பட்ஜெட் புஷ்பராஜ் கோடரியுடன் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களை உற்சாகப்படுத்தி இருந்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: "பேட் கேர்ள்" பற்றிய கேள்வி.. கொந்தளித்த ஆர்.கே.செல்வமணி.. "அரைவேக்காட்டுத்தனம்" என ஆவேசம்.!