"பேட் கேர்ள்" பற்றிய கேள்வி.. கொந்தளித்த ஆர்.கே.செல்வமணி.. "அரைவேக்காட்டுத்தனம்" என ஆவேசம்.!



rk selvamani about bad girl movie

'பேட் கேர்ள்'

பிரபல இயக்குனரான வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் நிறுவன தயாரிப்பில் அறிமுக இயக்குனரான வர்ஷா பாரத் என்பவர் இயக்கும், திரைப்படம் தான், 'பேட் கேர்ள்'. இந்த திரைப்படத்தில் நடிகைகள் அஞ்சலி, ரம்யா உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றனர்.

'பேட் கேர்ள்' டீசர்

ஓரிரு வாரங்களுக்கு முன்பு பேட் கேர்ள் திரைப்படத்தின் டீசர் வெளியாகிறது. இந்த திரைப்படம் பற்றிய பல்வேறு சர்ச்சைகளை அன்றைய நாளிலிருந்து சமூக வலைதளங்களில் காண முடிகிறது. இதற்கு எதிராகவும் ஆதரவாகவும் நிறைய கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றது.

இதையும் படிங்க: சமூகத்தின் மீதான கவனத்தை பிரதிபலிக்கும் பேட் கேர்ள் டீசர்.. வீடியோ லிங்க் உள்ளே.!

குக்கரில் சாதம்

இந்த நிலையில், பிரபல இயக்குனரான ஆர்.கே.செல்வமணி இப்படத்திற்கு ஆதரவாக பேசி இருக்கிறார். அதில், "குக்கரில் சாப்பாடு வைத்திருக்கும் போது, விசில் வழியாக ஒரு சில அரிசி வெளியில் வரும். அதை வைத்து சாதம் முழுவதும் வேக வில்லை என்று முடிவெடுத்து விட முடியுமா.?" 

அரைவேக்காட்டுத்தனம்

"ஒரு படத்தின் டீசரை மட்டும் வைத்துக்கொண்டு, அதை எப்படி நாம் விமர்சிக்க முடியும்.? படத்தை முழுமையாக பார்த்தால் தான் சரியாக இருக்கும். அந்த படம் எப்படிப்பட்டது என்று கருத்து கூறுவது நம்மால் முடியும். அதற்கு முன்பாகவே கருத்து கூறுவது அரைவேக்காட்டுத்தனம்." என்று தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: உங்க வீட்டுல ஆரம்பிங்க - பேட் கேர்ள் விவகாரத்தில், பா. ரஞ்சித்தை குறிப்பிட்டு மோகன் ஜி எதிர்ப்பு..! காரணம் என்ன?