ரூ.15000 ஆட்டைய போட்டாங்கப்பா.. அழுவாகா? சிரிக்காவா? - சீரியல் நடிகருக்கு விபூதி அடித்த மோசடி ஆசாமி.!



Actor Mirchi Senthil Cheated by Online Scammer

 

விஜய் டிவி, ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர்களில் நடித்து பிரபலமான நடிகர் செந்தில் குமார். இவரை மிர்ச்சி செந்தில் என்றால் பலருக்கும் தெரியும். விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் நெடுந்தொடரில் மாயன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்து இருந்தார். 

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா நெடுந்தொடரில் நடிக்கிறார். இதுதவிர்த்து தவமாய் தவமிருந்து, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படத்திலும் நடித்துள்ளார். இதனிடையே, நடிகர் செந்திலிடம் மர்ம நபர் ரூ.15000 பறித்துக்கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: சூர்யா 45 படப்பிடிப்பு நிறுத்தம்; மக்கள் புகாரால் காவல்துறை அதிரடி.!


பணத்தை இழந்த நடிகர்

செந்திலின் நண்பரின் வாட்சப் எண்ணில் இருந்து தொடர்புகொண்டவர், தனக்கு அவசமராக ரூ.15000 வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். செந்திலும் கார் ஒட்டிக்கொண்டு இருந்த காரணத்தால், அவசரத்தில் முதலில் பணத்தை அனுப்பி விட்டு, பின் சந்தேகித்து நண்பருக்கு தொடர்புகொண்டபோது, வாட்சப்பை ஹேக்கிங் செய்த மர்ம நபர் நடத்திய மோசடி அம்பலமானது. 

தற்போது செந்திலை போல பலரும் பணத்தை இழந்தது தெரியவந்த காரணத்தால், நடிகர் செந்தில் தன்னைப்போல யாரும் ஏமாற வேண்டாம். வாட்ஸப்பில் யாரும் பணம் கேட்டால், அவர்களுக்கு தொடர்புகொண்டு உண்மையை உணர்ந்து பணத்தை அனுப்புங்கள் என கோரிக்கை வைத்துள்ளார். 

இதையும் படிங்க: ஒருத்தனுக்கு ஒருத்தினு சொல்றாங்க, எய்ட்ஸில் ஏன் முன்னணி இடம்? இயக்குனர் டிஜே ஞானவேல்.!