மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னாச்சு?.. நடிகர் கமல் ஹாசனின் அண்ணன் சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதி.!
தமிழ் திரையுலகில் மூத்த & முக்கிய நடிகராக இருப்பவர் கமல் ஹாசன். இவரின் சொந்த அண்ணன் சாருஹாசன். இவரும் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தை கொண்டவர் ஆவார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியான திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் சாருஹாசன், தற்போது 93 வயதை கடந்துள்ளார். இதனால் வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: அமரன் படம் எப்படி?.. வெளியானது புளூ சட்டை மாறனின் ரிவியூ..!
மருத்துவமனையில் அனுமதி
இதனிடையே, தீபாவளிக்கு முன்தினம் இரவில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை அவரின் மகள் சுஹாசினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
தனது தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ள நிலையில், அவர் விரைந்து குணமாகி வீடு திரும்புவார் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக சுஹாசினி தெரிவித்தார்.
இதையும் படிங்க: கண்ணே காதல் மொழி பேசுதே.. அடேய் ஜெப்ரி - சவுந்தர்யா.. இப்படித்தான் இருக்கீங்களா?.. லவ்பீகமான பிக் பாஸ் வீடு.!