மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கனகாவை பார்த்ததும் செம ஷாக்காகிட்டேன்.! அதை பேச விரும்பல.! நடிகர் ராமராஜன் வருத்தம்!!
தமிழ் சினிமாவில் மூத்த பழம்பெரும் நடிகையாக வலம் வந்த தேவிகாவின் மகள்தான் கனகா. இவர் கரகாட்டக்காரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெருமளவில் பிரபலமானார். முதல் படமே இவருக்கு பெயரும், புகழும் வாங்கித் தந்தது. மேலும் பட வாய்ப்புகளும் வந்த நிலையில் அவர் ரஜினி உட்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்து 80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தனிமையில் நடிகை கனகா
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார். தனது அம்மா இறந்த பிறகு சினிமாவில் இருந்து விலகினார். மேலும் அவர் சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனிமையில் வசித்து வருகிறாராம். இந்த நிலையில் அண்மையில் குட்டி பத்மினி அவரை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இதையும் படிங்க: தளபதி விஜயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் அந்த நபர் யார்.?! மனைவியிடம் கூட பேச முடியாதாமே.?!
கனகாவை கண்டு ஷாக்கான ராமராஜன்
இந்த நிலையில் நடிகர் ராமராஜன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது ஒருவர் என்னிடம் வந்து உங்களைப் பார்க்க கனகா வந்திருக்கிறார் என கூறினார். நான் ஆர்வத்துடன் வேகமாக சென்று ஒரு பெண்மணியிடம் கனகா எங்கே என கேட்டேன். அதற்கு அவர் நான்தான் கனகா அடையாளம் தெரியவில்லையா? என சிரித்துக் கொண்டே கேட்டார்.
நன்கு வெயிட் போட்டு, தலையில் சிகப்பு நிற டை அடித்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறியிருந்தார். நான் ஷாக் ஆகிவிட்டேன். அதற்கு மேல் அதை பற்றி பேச விரும்பவில்லை. ஆனால் அவரது அம்மாவின் இறப்பு அவரை ரொம்பவே பாதித்துள்ளது என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கையில் கட்டுடன் கேன்ஸ் விழாவில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அறுவை சிகிச்சை.! எப்போது? என்னாச்சு??