பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கையில் கட்டுடன் கேன்ஸ் விழாவில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அறுவை சிகிச்சை.! எப்போது? என்னாச்சு??
1997-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் என்ற படத்தின் மூலம் சினிமா துறைக்குள் காலடி எடுத்து வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். தொடர்ந்து அவர் தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஒரு சில படங்களிலேயே அவர் நடித்திருந்தாலும் அவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
ஐஸ்வர்யா ராய்
தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் பாலிவுட் சினிமாவில் பல டாப் ஸ்டார்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். மேலும் இவர் தெலுங்கு மற்றும் பெங்காலி மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்ய ராய் கடந்த 2007ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.
இதையும் படிங்க: வாவ்.. வேறலெவல் லுக்.! கையில் கட்டுடன் அசத்தல் நடைபோட்ட ஐஸ்வர்யா ராய்.! எங்கு பார்த்தீங்களா??
அறுவை சிகிச்சை
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து எண்ட்ரி கொடுத்தார். ஐஸ்வர்யா ராய் அண்மையில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கையில் கட்டுடன் பங்கேற்றிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் விபத்து ஒன்றில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் மேலும் கேன்ஸ் விழாவை முடித்து மும்பை திரும்பியதும் அறுவை சிகிச்சை நடைபெறவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதையும் படிங்க: இதுதான் நான்.. இப்படி என்னை பார்த்துருக்கீங்களா.! ரசிகர்களுக்காக தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படம்.!