மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதி விஜயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் அந்த நபர் யார்.?! மனைவியிடம் கூட பேச முடியாதாமே.?!
தமிழ் சினிமாவின் தளபதி :
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவரது வளர்ச்சி தமிழ் சினிமாவில் எவராலும் எட்ட முடியாதது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு தனக்கான ரசிகர் படையை அவர் உருவாக்கி வைத்திருக்கிறார். விஜயின் நடிப்பில் கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் லியோ திரைப்படம் வெளியாகியது.
மாணவர்களுக்கு விருது :
அடுத்ததாக அவர் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவருடன் பிரசாந்த் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். கடந்த ஆண்டு அவர் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளை அழைத்து விருது வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினார். இந்த வருடமும் அதுபோலவே மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்படும் என்று நடிகர் விஜய் தெரிவித்து இருக்கின்றார்.
தமிழக வெற்றி கழகம்
பல ஆண்டுகளாக விஜய் அரசியலுக்கு வர போகிறார் என்று கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே கட்சி தொடங்கி இருந்தாலும், அந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று அவர் தெரிவித்தார்.
புஸ்ஸி ஆனந்த்தின் பிடியில் விஜய்.?
இந்த நிலையில் அவரது நடிப்பு மற்றும் அரசியல் வாழ்க்கை அனைத்தையும் ஆட்டுவிப்பது புஸ்ஸி ஆனந்த் தான் என்று கூறப்படுகிறது. அவர் எப்போதும் விஜய்யுடன் இருக்கக்கூடிய ஒரு நபர். அரசியல் பற்றி பேசுவதாக இருந்தாலும் அல்லது புதிய படங்களில் அவர் நடிக்கப் போவதாக இருந்தாலும் புஸ்ஸி ஆனந்த்திடம் கூறி அவர் சம்மதித்தால் மட்டும்தான் விஜய் களத்தில் இறங்குவாராம்.
ரசிகர்கள் அதிர்ச்சி :
அவ்வளவு ஏன் தனது தாய் தந்தையுடன் கூட விஜய் அதிகம் பேசாமல் புஸ்ஸி ஆனந்த் பார்த்துக் கொள்கிறாராம். தனது நிலைப்பாடு என்ன என்பது பற்றி தனது மனைவி மற்றும் மகனிடம் கூட விஜய் பேச அவர் அனுமதிப்பது இல்லையாம். அந்த அளவிற்கு தனது கட்டுப்பாட்டில் விஜயை புஸ்ஸி ஆனந்த் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.