திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரசிகையுடன் கட்டிப்பிடித்து போஸ் கொடுத்த அனிமல் பட நடிகர்; வைரலாகும் போட்டோ.!
ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் ரன்பீர் கபூர். Aa Ab Laut Chalen படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமான நடிகர் ரன்பீர், ஹிந்தியில் முன்னணி நடிகராவும், பெண் ரசிகர்களால் விரும்பப்படும் நபராகவும் இருந்து வந்தார்.
பிரம்மஸ்திரா திரைப்படத்திற்கு பின்னர் இந்திய அளவில் பெரிதாக அறியப்பட்ட ரன்பீர், கடந்த 2022ம் ஆண்டு தன்னுடன் நடித்த நடிகை ஆலியா பட்டை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். காதலில் இணைந்து கரம்பிடித்த ஜோடிக்கு பெண் குழந்தையும் இருக்கிறது.
சமீபத்தில் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூர் நடித்து வெளியான அனிமல் திரைப்படம் ரூ.1000 கோடி வசூலினை கடந்து மாபெரும் சாதனை படைத்து இருந்தது.
இந்நிலையில், நடிகர் ரன்பீர் கபூர் ரசிகை அவருக்கு போட்டோ எடுக்க விருப்பப்பட்ட, ரசிகையை கட்டியணைத்தவாறு போஸ் கொடுத்தார். இது குறித்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.