திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
புத்தாண்டின் தொடக்கம் இப்படித்தான் இருக்கனும்., "மரம் நாடும் அறமே மாபெரும் அறம்": அசத்திய நடிகர் சந்தானம்.!
தமிழ் திரையுலகில் சின்னத்திரை மூலமாக அறிமுகமாகி, வெள்ளித்திரையில் காமெடி சூப்பர்ஸ்டாராக வலம்வந்த நடிகர் சந்தானம். தற்போது கதாநாயகனாக பல்வேறு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். எப்போதும் இயற்கை மீது காதல் கொண்ட நடிகர் சந்தானம், விவசாய பின்புலத்தை கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.
காமெடியில் தமிழ் திரையுலகின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள சந்தானம், பல நாயகர்களின் வளர்ச்சிக்கும் பின்புலமாக இருந்துள்ளார்.
இவர் படத்தில் நடித்திருந்தால், சந்தானத்தின் காமெடி நன்றாக இருக்கும் என்றே பல படங்களை கண்டு மக்கள் ரசித்தனர். இன்று அவர் நாயகனாக நடிக்க தொடங்கி, காமெடிகள் வெற்றிடத்தை கொடுத்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன.
எனினும் அவர் ஏற்படுத்திய வெற்றிடம், இன்று வரை அப்படியே இருக்கிறது. பல புதிய படங்கள் ரசிகர்களின் மனதை வெல்வது போல வந்தாலும், சந்தானத்தின் நடிப்பால் வயிறு குலுங்க சிரித்த அரங்கம் மீண்டும் அதே சிரிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், நடிகர் சந்தானம் புத்தாண்டை வரவேற்கும் பொருட்டு, தனது வீட்டில் மரம் ஒன்றை நட்டு புத்தாண்டு வாழ்த்துக்களுடன் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். நடிகர் சந்தானத்தின் செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.