ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி செய்த செயலால் கோபியை வெளுத்து வாங்கும் பாக்கியா! வைரல் ப்ரோமோ வீடியோ காட்சி...

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் கோபி தனது மனைவியான பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்து விட்டு, முன்னாள் காதலியான ராதிகாவை திருமணம் செய்து கொண்டு பெரும் அல்லல் பட்டு வாழ்ந்து வந்தார். பின்னர் ராதிகா கூடவும் வாழ்க்கை செட் ஆகாமல் தற்போது பாக்கியா வீட்டில் உள்ளார்.
இல்லத்தரசிகளை பெருமளவில் கவர்ந்த இத்தொடரில் குடும்பம் மட்டுமே உலகம் என வாழ்ந்து வந்த பாக்கியலட்சுமி கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்க்கும் காட்சியாகும். பின் தனியாளாக குடும்பத்தை சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு அவர் தன்னம்பிக்கையோடு சமையல் தொழிலில் இறங்கி புதிய முயற்சியில் ஈடுப்பட்டு வெற்றியையும் கண்டுள்ளார். இந்நிலையில் பாக்கியா பிறந்தநாளை அவரது குடும்பத்தினர் கோலாகலமாக கொண்டாடினார்.
மேலும் பாக்கியாவின் மகன்கள் இருவரும் தற்போது பாக்கியா வீட்டிற்கு வந்துள்ளனர். இவர்கள் வந்ததால் பாக்கியா பரபரப்பாக கிட்சனில் வேலை செய்த போது கோபி பாக்கியாவிடம் வந்து பேசியுள்ளார். இதற்கு பாக்கியா தனது முகத்தை கடுகடுகெனவென வைத்துக் கொண்டு கோபியை வார்த்தையால் வெளுத்து வாங்கிய ப்ரோமோ வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: விஜய்டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் திடீரென நடந்த விபத்தில் கதையில் எதிர்பாராத ட்விஸ்ட்.....வைரலாகும் வீடியோ காட்சி....
இதையும் படிங்க: "திருமணத்திற்கு பின் இப்படி ஆகிடுச்சு".. வேதனை தெரிவித்த ஜோதிகா.!