"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
விஷாலுக்கு என்னதான் ஆச்சு?.. உலாவும் மர்மம்.. விளக்கம் கொடுத்த விஷால் மக்கள் நல இயக்கம்..!
சுந்தர் சி இயக்கத்தில், விஷால், சந்தானம், அஞ்சலி உட்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் மதகஜராஜா. இப்படம் கடந்த 2014 ம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிச்சென்றது.
மதகஜராஜா ரிலீஸ்
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின்னர், 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில், நடிகர் விஷால் உடல்நலக்குறைவுடன், கைகள் நடுங்கியபடி கலந்துகொண்டார். அவருக்கு காய்ச்சல் காரணமாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
விஷாலின் உடல்நிலை
இந்நிலையில், விஷால் மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள தகவலில், "விஷாலின் உடல்நிலை தொடர்பாக கற்பனையான தகவலை பகிரவோ, பரப்பவோ வேண்டாம். சில யூடியூப் சேனல்கள் உண்மைக்கு புறம்பான தகவலை பதிவு செய்கின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். விஷாலின் உடல்நிலை ஆரோக்கியத்துடன் உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "இருவரும் உண்மையா இல்ல, ரொம்ப வீக்" - சுனிதாவால் கதறியழுத சௌந்தர்யா, ஜாக்குலின்.!