"இருவரும் உண்மையா இல்ல, ரொம்ப வீக்" - சுனிதாவால் கதறியழுத சௌந்தர்யா, ஜாக்குலின்.!



 Bigg Boss Tamil Season 8 Jacqueline Cry after Sunita Blames Her 

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வீட்டில், இறுதிக்கட்டத்தை நோக்கிய பயணம் நடக்கிறது. இதனால் முந்தைய வாரங்களில் எலிமினேஷன் முறையில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள், மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிறந்து விளங்கும் 2 போட்டியாளர்கள் வீட்டிற்குள்ளேயே எஞ்சி இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் சார்பில் வெளியாகியுள்ள ப்ரோமோவில், சுனிதா சௌந்தர்யா, ஜாக்குலினை நோக்கி இருவருக்கும் உள்ள பொதுவான ஒரு விஷயம் என்றால், உங்கள் இருவரிடமும் உண்மைத்தன்மை என்பது கிடையாது. ஜாக்குலின் ரொம்ப வீக் என்று கூறுகிறார். இதனால் மனமுடைந்த இருவரும் கதறியழுதனர். மேலும், ஜாக்குலினை பார்த்து, நீங்கள் கைதட்டல் வரும் இடத்தில் உங்களின் நட்பு வட்டாரத்தை ஏற்படுத்திக்கொள்கிறீர்கள் என சக போட்டியாளர் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: Mid Week Eviction: பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஷாக் செய்தி.. மிட் வீக் எவிக்சன் அறிவிப்பு.!

அதேபோல, ஆடிய ஆட்டம் என்ன? டாஸ்கில் போட்டியாளர்கள் இணைந்து தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் போட்டி தொடர்ந்து சுவாரஷ்யத்தன்மை அடைந்து இருக்கிறது. இவ்வாறான கொண்டாட்டத்தையே பல நாட்களாக பார்வையாளர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

இதையும் படிங்க: வீட்டுக்குள்ள அடிதடி, வெளிய கொண்டாட்ட கும்மியடி.. இது பிக் பாஸ் தோழர்கள் சங்கம்.! வைரல் வீடியோ இதோ.!