தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிர்ச்சி! திடீரென கட்டுப்பாட்டை இழந்த ட்ரோன்.! பலத்த காயமடைந்த பிரபல நடிகர்!!
தெலுங்கு சினிமாவில் ஜின்னா, டைனமைட் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகர் விஷ்ணு மஞ்சு. இவர் பிரபல முன்னணி தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் ஆவார். விஷ்ணு மஞ்சு பெரும் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் கண்ணப்பா என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை அவரது தந்தையே தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து நியூசிலாந்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று படத்தின் முக்கியமான ஆக்ஷன் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. இதனை மிகவும் குளோஸாக, பிரம்மாண்டமாக காட்டுவதற்காக ட்ரோன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அப்பொழுது சிக்னல் இல்லாமல் கட்டுப்பாட்டை இழந்த ட்ரோன் விஷ்ணு மஞ்சுவின் கையில் தாக்கியுள்ளது. அதாவது ட்ரோனின் இறக்கைகள் விஷ்ணு மஞ்சுவின் கைகளில் ஆழமாக காயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் ஓய்வில் இருப்பதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.