வெளுத்து வாங்கிய மழை.. பாய்ந்தோடிய வெள்ளம்.. இந்தோனேஷியாவில் சோகம்.. பலி எண்ணிக்கை உயர்வு.!



Indonesia Rain Flood 3 Died

மழை, வெள்ளம் காரணமாக 3 பேர் உயிரிழந்த சூழலில், பலரும் காயம் அடைந்தனர்.

இந்தோனேஷியா நாட்டில் உள்ள ஜகர்தா, அதனை சுற்றியுள்ள பல இடங்களில் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது.

மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பல குடியிருப்புகள் நீரில் மூழ்கிப்போயின. இதனால் வீடுகளை இழந்த மக்கள், வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர்.

இதையும் படிங்க: 4 வயது முதல் சிறுமிகள் தேடித்தேடி பலாத்காரம், கட்டாய திருமணம்.. சூடானில் சோகம்.!

அங்குள்ள மேற்கு ஜாவா பகுதியில் 25 நகரங்கள் வெள்ளம், நிலச்சரிவு காரணமாக பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

 

குறிப்பாக சுகபூமி பகுதியில் பெய்த மழை காரணமாக 3 பேர் பலியாகினர். பலர் மாயமாகியுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் தான் ஜாவாவில் மழைக்கு 25 பேர் பலியாகி இருந்தனர். இதனிடையே மீண்டும் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: உக்ரைன் - ரஷ்யா போரில், சொந்த நாட்டு மக்களை கடத்தி போரில் ஈடுபடுத்தும் ஜெலன்ஸ்கி? வெளியான அதிர்ச்சி தகவல்.!