மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த விஷயத்தில் விக்கி இல்லை.. நயன்தாராதான் ரொம்ப லக்கி! ஓபனாக பிரபல சர்ச்சை நடிகை கூறியதை பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார். பின் இருவரும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டனர்.
அண்மையில் விக்கி-நயன் ஜோடி ஜாலியாக ஸ்பெயின் நாட்டிற்கு செகண்ட் ஹனிமூன் சென்றனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி குறித்து பிரபல சீரியல் நடிகை ஸ்ரீநிதி கூறிய கருத்து வைரலாகி வருகிறது. நடிகை ஸ்ரீநிதி வலிமை படம் குறித்து விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கியவர். மேலும் அவர் சிம்பு தன்னை காதலிப்பதாக அவரது வீட்டிற்கு முன் தர்ணாவில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் ஸ்ரீநிதி பேட்டி ஒன்றில் நயன் மற்றும் விக்கி ஜோடி குறித்து கூறுகையில், எனக்கு நயன்தாராவை ரொம்ப பிடிக்கும். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் விக்னேஷ் சிவன் லக்கி கிடையாது. அவர் ஒரு தமிழ் பையன். நன்றாக பார்த்துக்கொள்வார். அதனால் நயன்தாராதான் லக்கி என்று கூறியுள்ளார்.