#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் சன் டிவியில் என்ட்ரி கொடுக்கும் காதலிக்க நேரமில்லை நாயகி.! அதுவும் எந்த டாப் சீரியலில் பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று சூப்பர்ஹிட்டான தொடர் காதலிக்க நேரமில்லை. இந்த தொடரின் பாடலும் ரசிகர்களை கவர்ந்து பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது. மேலும் அந்த டைட்டில் பாடல் இன்றுவரை பல ரசிகர்களின் பேவரைட் பாடலாகவும், ரிங்டோனாகவும் உள்ளது.
காதலிக்க நேரமில்லை நாயகி சந்திரா
காதலிக்க நேரமில்லை தொடரில் பிரஜனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சந்திரா லக்ஷ்மன். இவர் மனசெல்லாம் படத்தில் ஸ்ரீகாந்திற்கு தங்கையாக நடித்திருந்தார். மேலும் அவர் பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சந்திரா, டோஷ் க்றிஸ்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
இதையும் படிங்க: நிறைவுக்கட்டத்தை எட்டியது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்; என்னனு தெரியுமா?.!
கயல் தொடர்
இந்த நிலையில் நடிகை சந்திரா மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கிறார். அவர் சன் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நடிக்க உள்ளார். அவர் தொடரில் ஹீரோயினுக்கு எதிரான மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முடிவுக்கு வரும் சன் டிவியின் மற்றுமொரு பிரபல சீரியல்.! ரசிகர்கள் ஷாக்!!