#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முடிவுக்கு வரும் சன் டிவியின் மற்றுமொரு பிரபல சீரியல்.! ரசிகர்கள் ஷாக்!!
சன் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் நாளுக்கு நாள் சுவாரசியமாக ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. காலை தொடங்கி இரவு வரை பல தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. எவ்வளவு புதிய சேனல்கள் வந்தாலும் சன் டிவி தொடர்களுக்கெனவே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
சன் டிவி தொடர்கள்
தற்போது சன் டிவியில் அதிகமாக பெண்கள் மற்றும் அவர்களின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு பெருமளவில் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ரசிகர்களிடையே பெருமளவில் ரீச்சாகி எதிர்நீச்சல், கயல், சுந்தரி, சிங்கப் பெண்ணே போன்ற தொடர்கள் டாப்பில் உள்ளது. இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த அன்பே வா, பிரியமான தோழி தொடர்கள் அண்மையில் முடிவடைந்தது.
முடிவுக்கு வரும் அருவி
இந்த நிலையில் தற்போது மற்றுமொரு தொடர் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அதாவது சன் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் அருவி தொடர் விரைவில் முடிவடைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த தொடரில் அம்பிகா, ஜோவிதா லிவிங்ஸ்டன் கார்த்திக் வாசுதேவன், ஈஸ்வர், கிருத்திகா உள்ளிட்ட பலமுக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.