#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நிறைவுக்கட்டத்தை எட்டியது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்; என்னனு தெரியுமா?.!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வந்த நடிகர் லிவிங்ஸ்டன். இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார். தற்போது தனக்கு கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இவரின் மகள் ஜோவிதா, சன் தொலைக்காட்சியில் அருவி நெடுந்தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நெடுந்தொடர் கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் இருந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது.
முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அம்பிகா:
இந்த நெடுந்தொடருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இத்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அம்பிகாவும் நடித்திருந்தார்.
இந்நிலையில், அருவி நெடுந்தொடரின் இறுதிக்கட்ட படப்பிடப்பிப்புகள் அனைத்தும் நடைபெற்று முடிந்துள்ளது என சின்னத்திரை வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இறுதிக்கட்டத்தை எட்டும் நெடுந்தொடர்:
விரைவில் இந்த நெடுந்தொடர் நிறைவுக்கு வந்ததும், மதியம் வேறொரு நெடுந்தொடர் ஒளிபரப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.