"வாய்ப்பு வேணுமா? நான் சொல்வதை கேளு" - நடிகை கூறிய தகவல்.. ஷாக்கில் திரையுலகம்.!



actress-fatima-sana-shaikh-on-sexual-harassment

 

ஹிந்தியில் முன்னணி நடிகராக இருந்து வரும் அமீர் கானின் நடிப்பில், பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தங்கல். இப்படத்தில் இடம்பெற்று பிரபலமடைந்த நடிகை பாத்திமா ராணா ஷைக். 

பாலியல் உறவுக்கு அழைப்பு

இவர் சமீபத்தில் தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்தபோது, தனக்கு எதிராக நடந்த பாலியல் தொல்லை குறித்து அதிர்ச்சிதரும் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், "ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த மேலாளர் ஒருவர், திரைப்படத்திற்கு வாய்ப்பு வழங்க பாலியல் உறவு வேண்டும். ஒத்துழைத்தால் வாய்ப்பு கிடைக்கும்" என மறைமுகமாக பேசியதாக நடிகை கூறினார். 

இதையும் படிங்க: நச்சென்ற கவர்ச்சி காட்டிய அஞ்சலி.. பிரமிக்க வைக்கும் புகைப்படத்தால்.. உற்சாகமான ரசிகர்கள்.!

actress

இந்த தகவல் இந்திய திரையுலகில் மீண்டும் ஒரு புயலை கிளப்பி இருக்கிறது. ஏற்கனவே மீ டூ-வில் தொடங்கி தற்போது வரை பல பாலியல் புகார்கள் நடிகைகள் தரப்பில் முன்வைத்தாலும், அவை விசாரணைக்கு பின் மந்த நிலையிலேயே இருக்கிறது. நடிகையும் யார் அந்த முக்கிய புள்ளி என தெரிவிக்காமல் இருந்துவிட்டார்.

இதையும் படிங்க: "எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?