மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"கேரள பாரம்பரியப்படி உடல் முழுவதும் தங்கத்தால் ஜொலித்த கார்த்திகா நாயர்!"
2009ம் ஆண்டு தெலுங்கில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக "ஜோஷ்" திரைப்படத்தில் அறிமுகமானவர் கார்த்திகா நாயர். இவர் முன்னாள் முன்னணி நடிகையான ராதாவின் மூத்த மகள் ஆவார். அதே ஆண்டில் "கோ" படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப்படங்களில் நடித்துள்ள கார்த்திகா நாயர், 2015ம் ஆண்டு "புறம்போக்கு என்கின்ற பொதுவுடைமை" என்ற படத்தில் தான் கடைசியாக நடித்திருந்தார். இந்நிலையில் இவரது திருமணம் சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் நடைபெற்றது.
பொதுவாகவே கேரளாவில் பெண்களுக்கு திருமணத்தின்போது எடை குறைவான மற்றும் பிரம்மாண்டமான நகைகளை பரிசாகக் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் கார்த்திகா நாயரும் அவரது திருமணத்தில் விலையுயர்ந்த பட்டுப்புடவையாலும், உடல் முழுக்க தங்க நகைகளாலும் ஜொலித்தார்.
கார்த்திகாவின் நகைகள் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த நகைகளின் விலை மதிப்பு எவ்வளவு இருக்கும்? அந்த நகைகள் எத்தனை சவரன் இருக்கும்? என்று அவரது ரசிகர்களும், பெண்களும் வியந்து வருகின்றனர்.