மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கருமுட்டை சர்ச்சை; தப்பா பேசுனவங்க மன்னிப்பு கேக்கணும்.! இல்லை.. கடுப்பான பட்டாஸ் பட நடிகை!!
தமிழ் சினிமாவில் பட்டாஸ், நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மெஹரீன். அவர் அண்மையில் கருமுட்டையை உறைய வைத்து பாதுகாப்பது குறித்து தெரிவித்திருந்தார். மேலும் அவர் தான் எப்போது திருமணம் என்ற முடிவை எடுக்காததால், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனது கருமுட்டையை உறைய வைத்து பாதுகாப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
கருமுட்டை உறையவைத்தல்
இந்த நிலையில் இதனை சில ஊடகங்கள் தவறாக சித்தரித்து அவதூறு பரப்புவதாக மெஹ்ரீன் கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், சில நிருபர்கள் தங்களது வேலையை மதித்து, சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் சமூகத்தின் மீதிருக்கும் பொறுப்பு என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது. போலியான மற்றும் தவறான தகவல்களுடன் ஒரு செய்தியை விற்பது ஒழுக்கக்கேடானது மட்டுமல்ல, சட்டவிரோதமானதும் கூட.
இதையும் படிங்க: இப்போதைக்கு நோ திருமணம்.! ஆனாலும்.. தனுஷ் பட நடிகை செய்துள்ள அந்த விஷயம்.! ஷாக்கில் ரசிகர்கள்!!
கடுப்பான நடிகை மெஹரீன் பதிவு
முட்டைகளை உறைய வைக்க ஒரு பெண் கர்ப்பமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கருமுட்டையை உறைய வைக்கும் முறை பற்றிய எனது தனிப்பட்ட விருப்பத்தையே விழிப்புணர்வுக்காக தைரியமாக பேசினேன். குழந்தைக்காக பெண்கள் அவசரமாக கருத்தரிக்க வேண்டியதில்லை.குழந்தை இப்போது வேண்டாம் என எண்ணுபவர்களுக்கு கருமுட்டைகளை பத்திரப்படுத்தி வைக்கும் முறையை சொன்னேன்.
இதை சரியாக புரிந்து கொள்ளாமல் என்மீது அவதூறு பரப்புகின்றனர். தவறான தகவலை பரப்பியவர்கள் உடனே அதனை நீக்கவேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்' எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வெளிவந்த சூப்பர் அப்டேட்.! முதன்முறையாக சூர்யாவுடன் ஜோடி சேரும் விஜய் பட நடிகை.! யார் பார்த்தீங்களா!!