மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெளிவந்த சூப்பர் அப்டேட்.! முதன்முறையாக சூர்யாவுடன் ஜோடி சேரும் விஜய் பட நடிகை.! யார் பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். சூர்யா 44 தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
சூர்யா 44
இந்தப் படத்திற்காக நடிகர் சூர்யா சம்பளமே வாங்காமல் நடிக்க உள்ளதாகவும், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜூம் சம்பளம் வாங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அண்மையில் வெளிவந்தது. இந்த நிலையில் சூர்யா 44படத்தின் நாயகி குறித்த தகவல் தற்போது பரவி வருகிறது
சூர்யாவுக்கு ஜோடியாகிறாரா பூஜா ஹெக்டே
அதாவது சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் இதற்கு முன்பு முகமூடி, விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் படத்தில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
இதையும் படிங்க: சூர்யா 44 பட இசையமைப்பாளர் இவர்தான்.! பிறந்தநாளில் போஸ்டருடன் படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!!
இதையும் படிங்க: சூர்யா 44 படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்.! அட.. யார்னு பார்த்தீங்களா!!