96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அடக்கடவுளே.. விஜய் டிவி பாவனிக்கு இப்படியொரு நிலையா?.. 15 நாட்கள் வலியோடு தவித்த நடிகைக்கு திடீர் அறுவை சிகிச்சை.!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சின்னத்தம்பி தொடரின் மூலமாக பிரபலமான நடிகை பாவனி ரெட்டி. இவர் பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். இந்த நிலையில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனது வாழ்க்கையில் இந்த 15 நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது. கழுத்தில் சிறிய வலியோடு பிரச்சனை ஆரம்பித்து பின்னாட்களில் அதிகமானது. பல நாட்கள் தூக்கமில்லாத இரவுகளாக இருந்தன.
எனக்கு படப்பிடிப்பும் இருந்ததால் ஓய்வு எடுக்க நேரமில்லை. இந்த வலியோடு ஹைதராபாத்துக்கும் சென்றேன். அங்கிருந்தவர்கள் என்னை பத்திரமாக பார்த்துக் கொண்டார்கள். படப்பிடிப்பு முடிந்த பின்னர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தேன். வலி மோசமான காரணத்தால் இறுதியில் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்து அதையும் முடித்து தற்போது நலமுடன் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.