#வீடியோ : வீல் சேரில் ராஷ்மிகா.. அடக்கடவுளே.. என்ன ஆச்சு.?! பதறிப்போன ரசிகர்கள்.!



ACTRESS RASHMIKA IN WHEEL CHAIR VIDEO VIRAL

நடிகை ராஷ்மிகா மந்தனா விமான நிலையத்திற்கு வீல் சேரில் வந்த வீடியோ வைரலாகி ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது. 

நடிகருடன் கிசுகிசு 

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் மிகவும் துடிப்பான, சுறுசுறுப்பான நடிகை. இவரது தொழிலான நடிப்பிற்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் தொடர்ந்து சில படங்களில் நடிக்க ஆரம்பித்த காரணத்தால் அவர் விஜய் தேவரகொண்டாவை காதலிக்கிறார் என்று கூறப்பட்டது.

இதையும் படிங்க: பிகில் பாண்டியம்மாவுக்கு குழந்தை பிறந்தாச்சு.! என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்!!

சுற்றுலா 

ஆனால் நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று இரு தரப்பினரும் மறுத்துவிட்டனர். அடிக்கடி அவருடன் ராஷ்மிகா சுற்றுலா செல்வதும் அந்த புகைப்படங்கள் இணையத்தில் கசிவதும் வழக்கம் தான். தற்போது படு பிஸியாக ராஷ்மிகா திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

rashmika

ஜிம்மில் விபத்து

நடிகை ராஷ்மிகா ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டபோது அவருக்கு காலில் அடிபட்டது. இந்த நிலையில், இன்று மும்பை செல்ல ஹைதராபாத் ஏர்போர்ட்டிற்கு அவர் வந்தபோது நொண்டி நொண்டி நடந்து வந்தார். 

வீல்சேரில் நடிகை 

மேலும், சிறிது நேரத்தில் அவர் வீல்சேரில் வைத்து உதவியாளரால் தள்ளிக் கொண்டு செல்லப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, ரசிகர்கள் மனம் உடைந்து விரைவில் உங்களுக்கு குணமடையட்டும் என்று கமெண்ட் போட்டு வருகின்றனர்.


இதையும் படிங்க: யாத்திசை திரைப்படத்தின் அடுத்த படைப்பு; பூஜையுடன் தொடங்கிய பணிகள்.!