பிகில் பாண்டியம்மாவுக்கு குழந்தை பிறந்தாச்சு.! என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்!!



Indraja blessed with boy baby

சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ரோபோ ஷங்கர். பின்னர் வெள்ளித்திரையில் காலடிபதித்த அவர் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா. அவர் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

மேலும் இந்திரஜா விருமன் படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது மாமாவான கார்த்திக் என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் இந்திரஜா மற்றும் கார்த்திக் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான Mr And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சில வாரங்களில் இந்திரஜா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து அவர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்கள். கர்ப்பமாக இருந்து வந்த இந்திராஜாவிற்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர்கள் அறிவித்திருந்த நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: யாத்திசை திரைப்படத்தின் அடுத்த படைப்பு; பூஜையுடன் தொடங்கிய பணிகள்.!

 

 

 

 

 

இதையும் படிங்க: ஹரி பாஸ்கர் - லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங் படம்; ட்ரைலர் உள்ளே.!