அழகில் அம்மாவை மிஞ்சிய ரோஜா மகள்..! அந்த ஒத்த புகைப்படத்திற்கே குவியும் பட வாய்ப்பு.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்த நடிகை ரோஜாவின் மகள் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. தமிழ் மட்டுமல்லாது தமிழ், கன்னடம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் கலக்கி வந்த இவர் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை 1999 ஆம் ஆண்டு இணைத்துக்கொண்டார்.
அதன்பிறகு அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கை என பிசியாகி விட்ட நடிகை ரோஜா படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இவருக்கு தற்போது ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது.
தற்போது நடிகை ரோஜாவின் மகளுக்கு 17 வயது ஆகியுள்ள நிலையில் அவரது பிறந்த நாளை விமர்சியாக கொண்டாடியுள்ளனர். மேலும் பிறந்தநாள் விழாவில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் சில தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அழகில் அம்மாவை மிஞ்சிவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.