ஓ சோனா... குட் பேட் அக்லியில் கியூட்டாக மாஸ் காட்டிய நடிகை சிம்ரன்.! ரசிகர்களுக்காக பகிர்ந்த வீடியோ!!



simran-shares-bts-video-in-good-bad-ugly-shooting-spot

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இத்திரைப்படத்தில் திரிஷா, சிம்ரன், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்தின் பழைய பட ரெபரன்ஸ் மற்றும் சில ஹிட் பாடல்கள் இடம் பெற்று ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 

குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிகை சிம்ரன் கேமியோ ரோலில் சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தார். ஆனால் திரையில் அவரது வருகை ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. அவரை ரசிகர்கள் கொண்டாடினர். இந்த நிலையில் நடிகை சிம்ரன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: அஜித்தின் குட் பேட் அக்லிக்கு வந்த சோதனை.! படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ்!!

இதையும் படிங்க: தாறுமாறு.. பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் குட் பேட் அக்லி.! 5 நாட்களில் மட்டும் இவ்வளவு வசூலா??