#BREAKING : தேவா பற்றி கேட்ட செய்தியாளர்.. இளையராஜா டென்ஷனாகி சொன்ன வார்த்தை.!
வெள்ளை உடையில் பார்க்க பளபளன்னு இருக்கும் நடிகை சாய் பல்லவி! வைரல் புகைப்படம்!!

மலையாள படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. பார்ப்பதற்கு மிகவும் சிம்பிளாக இருக்கும் இவர் பலருக்கும் பிடித்த பேவரைட் ஹீரோயின்களில் ஒருவர்.
மலையாளம், தெலுங்கு என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுக்கும் இவருக்கு தமிழில் எந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஓடவில்லை. தெலுங்கில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைத்தன்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்த லவ் ஸ்டோரி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது ஷியாம் சிங்கா ரெட்டி மற்றும் விர்ட்டா பர்வம் ஆகிய படங்களில் சாய் பல்லவி நடித்து முடித்துள்ளார். சினிமாவில் பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் சாய் பல்லவி, சமீபகாலமாக போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது வெள்ளை உடையில் பார்க்க பளபளன்னு இருக்கும் சில புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சாய் பல்லவி. அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.