மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. இவரா.! நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் முதன்முறையாக இணையும் முன்னணி இளம்நாயகி.!
தெலுங்கு சினிமாவில் 2011-ஆம் ஆண்டு வெளிவந்த நுவ்விலா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள அவருக்கு பெருமளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. பின்னர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்தார்.
சினிமாதுறையை கலக்கும் விஜய் தேவரகொண்டா
இப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ராஷ்மிகாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் திரைப்படமும் பல மொழி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று விஜய் தேவகொண்டா பெருமளவில் பிரபலமானார். தொடர்ந்து அவர் நடிகையர் திலகம், நோட்டா, டியர் காம்ரேட், லைகர், குஷி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய்க்கு ஜோடியாகும் ப்ரேமலு ஹீரோயின்.. அடடே.. அடிக்குது லக்கு.!
முதன்முறையாக இணையும் இளம்பிரபலம்
அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா தற்போது தில் ராஜு தயாரிப்பில் ரவி கிரண் கோலா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக, ஹீரோயினாக சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அது உண்மையானால் இதுவே அவர்கள் இருவரும் இணையும் முதல் திரைப்படமாகும்.
இதையும் படிங்க: "என் கைகளில் படிந்த ரத்தம் அவர்களின் மரணம் அல்ல.. என் சொந்த மறுபிறப்பு" - விஜய் தேவரகொண்டாவின் புதிய படம்.!