மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய்க்கு ஜோடியாகும் ப்ரேமலு ஹீரோயின்.. அடடே.. அடிக்குது லக்கு.!
நடிகை மமிதா பைஜூ பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
பிரேமலு படம் :
சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற மலையாள திரைப்படம் பிரேமலு. மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட சினிமா ரசிகர்களையும் இந்த படம் கவர்ந்துள்ளது. இந்த திரைப்படத்தின் கதை ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டது.
மமிதா பைஜூவுக்கு ரசிகர் கூட்டம் :
எனவே அந்த லைஃப் ஸ்டைலை ஒத்து இருந்ததால் இது தெலுங்கு ரசிகர்களிடம் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. அது மட்டுமல்லாமல் அதில் ஹீரோயினாக நடித்த மமிதா பைஜூவுக்கு ரசிகர் கூட்டம் அதிகமாகியது. அவரது அடுத்த படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அது பற்றிய ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "என் கைகளில் படிந்த ரத்தம் அவர்களின் மரணம் அல்ல.. என் சொந்த மறுபிறப்பு" - விஜய் தேவரகொண்டாவின் புதிய படம்.!
விஜய் தேவரகொண்டாவுடன் பட வாய்ப்பு :
அதாவது தெலுங்கில் காதல் மன்னனாக இருக்கும் விஜய் தேவரகொண்டா நிறைய இளம் பெண்களின் ஆஸ்தான ஹீரோவாவார் அவருக்கு ஜோடியாக தான் மமிதா பைஜூ தற்போது நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜெர்சி பட இயக்குனர் :
ஜெர்சி படத்தை இயக்கிய இயக்குனர் கௌதம் இந்த படத்தை இயக்க உள்ளாராம். இதில் ராணுவ வீரராக நடிக்கும் விஜய் தேவரகொண்டாவிற்கு ஹீரோயினாக மமிதா பைஜூ நடிக்க உள்ளாராம். இது தான் ரசிகர்களை உற்சாகப்படுத்திய அந்த தகவல்.
இதையும் படிங்க: விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம்; மாஸ் அப்டேட்டால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!