மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உண்மைதான்.. சில தவறுகளை செய்திருக்கேன்.! மனம்திறந்து ஃபீல் செய்த நடிகை சமந்தா!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவர் தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் சில ஆண்டுகளிலேயே பிரிந்தனர். அதனை தொடர்ந்து சமந்தா சினிமாவிலேயே தனது முழு கவனத்தையும் செலுத்து வந்தார். இதற்கிடையே மயோசிடிஸ் (Myositis) எனும் தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதால் சில காலங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர் தற்போது Citadel: Honey Bunny என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.
அந்த வெப் தொடர் வரும் 7 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பேசுகையில்,
நான் கடந்த காலத்தில் சில தவறுகளை செய்திருக்கிறேன். அது உண்மைதான் நான் ஒத்துகொள்கிறேன். இன்னும் சொல்லப்போனால் கடந்த காலத்தில் எனக்கு சில விஷயங்கள் சரியாக அமையவில்லை. அந்த தோல்வியை நான் ஏற்றுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
இதையும் படிங்க: 8 வயது சிறுவன் ஏமாத்திட்டான்.! அடையார் சிக்னலில் நடந்த ஷாக் சம்பவம்.! குமுறிய நடிகை நிவேதா பெத்துராஜ்!!